BB Tamil 8: எல்லா இடத்துலயும் விட்டுக்கொடுக்க முடியாது - முத்து - ஜாக்குலின் இடையே வாக்குவாதம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 88 வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா, ரயான், ஜாக்குலின் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தொடங்கி இருக்கிறது.

இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் டாஸ்க்கில் அருணிற்கு கிடைத்த பாயிண்ட்ஸை எடுத்துக்கொள்ளுங்கள் என்று பிக் பாஸ் சொல்கிறார்.

இதனால் முத்துகுமரன், ரயான், ஜாக்குலின் இடையே மோதல் ஏற்படுகிறது. எல்லோரும் சேர்ந்து என்னோடத காலிப் பண்ணுவீங்கனு தெரியும். எனக்குத்தான் ரிஸ்க் அதிகம் என்று ரயான் சொல்ல எனக்கு அப்படி தோணல என்று முத்துக்குமரன் கூறுகிறார்.

அதேபோல ஜாக்குலின் எல்லா இடத்துலயும் விட்டுக்கொடுக்க முடியாது என்று சொல்ல முத்துக்குமரன் எல்லா இடத்துலயும் உன்னைய விட்டுக்கொடுக்க சொல்லவே இல்லையே என்று கூறுகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.