உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்கம் வென்றார் ஆர்.வைஷாலி
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார். கால் இறுதி சுற்றில் வைஷாலி 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் சூ ஜினரை தோற்கடித்தார். இதையடுத்து நடைபெற்ற அரை இறுதி சுற்றில் மற்றொரு சீன வீராங்கனையான ஜு வென்ஜுனுடன் மோதினார் வைஷாலி.
இதில் வைஷாலி 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்த வைஷாலிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. ஜு வென்ஜுன் இறுதிப் போட்டியில் சகநாட்டைச் சேர்ந்த லீ டிங்ஜியை 3.5-2.5 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். லீ டிங்ஜிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


