BB Tamil 8: ``தீபக் அண்ணா வெளிய போறதுல எனக்கு உடன்பாடு இல்ல; ஆனா...- முத்துக்குமரன் சொல்வதென்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 85 வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் 8 கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் எவிக்ஷனில் ஜெப்ஃரியும், அன்ஷிதாவும் வெளியேறி மீதம் 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இந்தப் போட்டியாளர்களிடையேதான் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே நடக்க இருக்கிறது. இதனால் போட்டிகள் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ்

இதனிடையே தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் இந்த வார எவிக்ஷனிற்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா,ரயான், ஜாக்குலின் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி ரயான், தீபக் அண்ணா வெளிய போறதுல எனக்கு உடன்பாடு இல்லதான். ஆனா நான் ஓட்டு போடுவேன். ஏன்னா நான் இங்க கப்பு ஜெயிக்கணும்னுதான் விளையாடிட்டு இருக்கேன் என்று முத்துக்குமரன் பேசியதும் இந்தப் புரோமோவில் இடம் பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.