Siragadikka Aasai: பிரச்னையை விஜயா மீது திருப்பி விட்ட ரோகிணி; முத்துவின் பிளாஷ்பேக் எப்போது?
சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் சிறகடிக்க ஆசை பற்றி ஒரு பதிவு கண்ணில் பட்டது. “ஒபி அடிக்காமல் ஓடும் ஒரே சீரியல் சிறகடிக்க ஆசை தான்” என்று இளைஞர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு என்ன அர்த்தம்?
சிறகடிக்க ஆசை சீரியலை பொறுத்தவரை ஒவ்வொரு எபிசோடும் ஏதோ ஒரு புது விஷயத்தைக் கொண்டிருக்கும். ஒரே விஷயத்தை ஜவ்வு போல இழுக்க மாட்டார்கள்.
"அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்” என்ற கூற்றுக்கு ஏற்ப இந்த சீரியல் கதாபாத்திரங்கள் செய்யும் தவறுகள் உடனுக்குடன் வெளிவரும் அல்லது அவர்களின் மனசாட்சியே அவர்களை நிம்மதியாக இருக்க விடாது.
சத்யா திருந்தியது, ரோகிணி நிம்மதி இன்றி எப்போதுமே பயத்தில் இருப்பது, மீனாவும் முத்துவும் பணக் கஷ்டம் இருந்த போதிலும் மனநிறைவுடன் வாழ்வது என வாழ்க்கையின் யதார்த்தத்தை இந்த சீரியல் பிரதிபலிக்கிறது. இயக்குநருக்கு ரசிகர்கள் சார்பாக Kudos!
நேற்றைய எபிசோடில் மனோஜை முத்து குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து நடந்ததைக் குடும்பத்தினரிடம் சொல்கிறார். வழக்கம் போல மனோஜும் ரோகிணியும் முத்து சொல்வது பொய் எனச் சமாளிக்கிறார்கள். ஜீவாவை முத்து அழைக்கிறார்.
ஜீவாவைப் பார்த்ததும் மனோஜ் `நம்ம காலி’ என்பது போல் முழிக்கிறார். ஜீவா நடந்தவற்றைக் கூறுகிறார்.
``மனோஜுடன் முன்னர் லிவிங் டு கெதரில் இருந்தது நான் தான், அவனை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. ஆனால் அவன் சொந்த குடும்பத்தையே ஏமாற்ற நினைத்தான். நான் அவனை ஏமாற்றிவிட்டேன். நான் செய்தது தவறுதான். ஆனால் எனக்குச் சில நியாயங்கள் இருந்தன. என்ன இருந்தாலும் நான் செய்தது தவறுதான், ஆனால் அந்தப் பணத்தை நான் திருப்பிக் கொடுத்துவிட்டேன்” என்கிறார்.
அதற்கான ஆதாரங்களையும் ஜீவா காட்டுகிறார். ரவியும், ஸ்ருதியும் அந்த ஆதாரங்களைப் பார்த்து, ஆமாம் இது ஒரிஜினல் தான் என்கின்றனர்.

மனோஜும் ரோகிணியும் தவற்றை ஒப்புக் கொள்கின்றனர். அண்ணாமலை அதிர்ந்து நிற்கிறார். விஜயா மனோஜின் சட்டையைப் பிடித்துக் கேட்கிறார். மனோஜ் சற்றும் யோசிக்காமல் ரோகிணி தான் இந்த ஐடியா கொடுத்தார் என்று மாட்டிவிடுகிறார். விஜயாவின் கோபம் ரோகிணி மீது திரும்பியது. இதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.
எபிசோட் முடிவில் வெளியான ப்ரோமோவில் ரோகிணியை விஜயா அறைகிறார். ஆனால் ரோகிணி தந்திரமாக விஜயா மீதே பழி சுமத்துகிறார். உங்கள் மகனுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்க விஜயா கோவத்தில் ரோகிணியை இன்னொரு அறைவிடுகிறார். ஆக ரோகிணி விஜயா மீதே பிரச்னையை திருப்பிவிட்டார். அப்படிச் செய்யவில்லை எனில் விஜயா கண்டிப்பாக ரோகிணியின் அப்பா விஷயத்தை இழுத்திருப்பார்.

நேற்றைய எபிசோடில் முத்து ஒன்று சொல்வார். `என் மீதுப் பழி போடுவது மனோஜுக்கு ஒன்றும் புதிதல்ல’ என்று. முத்து அடிக்கடி இந்த வசனத்தைச் சொல்கிறார். முத்துவை விஜயா ஏன் இவ்வளவு வெறுக்கிறார், முத்து மீது மனோஜ் என்ன பழிபோட்டார் போன்ற கேள்விகளுக்கு விடைகள் கூடிய விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்துவின் பிளாஷ்பேக்கில் இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/JailMathilThigil

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

