BB Tamil 8: Jeffry இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்... - நெகிழும் ஜெஃப்ரியின் தந்தை
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இறுதிக் கட்டத்தை இந்த நிகழ்ச்சி நெருங்கி இருக்கும் நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 26) வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில் ஜெஃப்ரியின் அம்மா, அப்பா வந்திருக்கின்றனர். முத்துகுமரனின் காமெடிக்கு நான் ரசிகை என்று ஜெப்ஃரியின் அம்மா சொல்ல, முத்துகுமரன் நெகிழ்கிறார். முடிஞ்ச அளவிற்கு நான் தாக்குப் பிடிக்கிறேன் என்று ஜெஃப்ரி சொல்ல, எப்படி ஜாலியா உள்ள வந்தயோ அதே மாதிரி வெளிய வரணும். உன் வாழ்க்கையை மாற்றினது பிக் பாஸ்தான் என்று அவரின் அம்மா சொல்கிறார். இவ்வளவு தூரம் நீ வந்ததே பெருசு. கடவுள் கொடுத்த கிஃப்ட் இது என்று ஜெப்ஃரியின் அப்பா மகிழ்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MaperumSabaithanil

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

