கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் டிச.28-ல் சப்-ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடக்கம்

சென்னை: 30-வது சப்-ஜூனியர் நெட்​பால் சாம்​பியன்​ஷிப் போட்டி சென்னை அடுத்த கவரைப்​பேட்​டை​யில் உள்ள ஆர்எம்கே உண்டு உறைவிட பள்ளி​யில் வரும் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் உட்பட 27 மாநிலங்களை சேர்ந்த 54 அணிகள் கலந்து கொள்​கின்றன.

சிறுவர் பிரி​வில் 27 அணிகளும், சிறுமிகள் பிரி​வில் 27 அணிகளும் பங்கேற்று விளையாட உள்ளன. இரு பிரி​விலும் முதல் 3 இடங்களை பிடிக்​கும் அணிகளுக்கு கோப்​பைகள், பதக்​கங்​கள், சான்​றிதழ்கள் வழங்​கப்பட உள்ளன. இந்த போட்டியை இந்திய நெட்​பால் கூட்​டமைப்​பின் ஆதரவுடன் தமிழ்​நாடு அமெச்​சூர் நெட்​பால் சங்கம் மற்றும் ஆர்எம்கே பள்ளி இணைந்து நடத்து​கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.