மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டி மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பாக தனது வாழ்க்கையைத் தொடங்கியும் அவரால் அதை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடியவில்லை. வினோத் காம்ப்ளியும் சச்சின் டெண்டுல்கரும் பள்ளி கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வினோத் காம்ப்ளியின் கிரிக்கெட் வாழ்க்கை பாதியிலேயே முடிவுக்கு வந்தது. அதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் அவரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்ட போது கூட எழுந்து நிற்க முடியாமல் அவதிப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் விவேக் த்ரிவேதி “அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு கட்டிகள் உள்ளன. அவர் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும், அவர் இன்னும் கவலைக்கிடமான நிலையில்தான் உள்ளார்” எனக் கூறியுள்ளார். அவருக்கு அந்த மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.