PKL 2024: தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி.., நிம்மதி பெருமூச்சு விட்ட தமிழ் தலைவாஸ்!!
PKL 2024: தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி.., நிம்மதி பெருமூச்சு விட்ட தமிழ் தலைவாஸ்!!
இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று (டிசம்பர் 6) தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால் ஆட்டம் ஆனது விறுவிறுப்பாக அரங்கேறியது. இதில், வெற்றிக்காக கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், தமிழ் தலைவாஸ் அணி 13 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதாவது, குஜராத் ஜெயண்ட்ஸ் 27 புள்ளிகள் எடுக்க, தமிழ் தலைவாஸ் 40 புள்ளிகளை எடுத்து வெற்றியை உறுதி செய்தது. இதில், தமிழ் தலைவாஸின் மொயின்ஷஃபாகி 13 புள்ளிகளை எடுத்து அசத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், தமிழ் தலைவாஸ் 16 போட்டிகளில் 6 ல் வெற்றி, 9 ல் தோல்வி அடைந்து 38 புள்ளிகளுடன் 9 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று (டிசம்பர் 7) நடைபெறும் முக்கிய போட்டியில் புனேரி பல்டன் மற்றும் UP யோதாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
follow our instagram for more latest updates
The post PKL 2024: தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி.., நிம்மதி பெருமூச்சு விட்ட தமிழ் தலைவாஸ்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


