Champions Trophy: `26/11 பிறகு 5 முறை இந்தியாவுக்கு வந்துவிட்டோம்! - பிசிசிஐ விமர்சிக்கும் அப்ரிடி
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆட பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என்பது பிசிசிஐயின் நிலைப்பாடு. தாங்கள் ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்பது பிசிசிஐயின் விருப்பம். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
ஐ.சி.சி அனைவரையும் சமநிலையாக நடத்த வேண்டும். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரமாட்டேன் என சொல்வதில் நியாயமில்லை. என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சேர்மன் மோஷின் நக்வி நேற்று பேசியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான அப்ரிடியும் பிசிசிஐ -யை இப்போது கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, விளையாட்டுக்குள் அரசியலை திணிப்பதன் மூலம் பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட்டை ஆபத்தான நிலைக்குத் தள்ளியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். ஹைப்ரிட் மாடலுக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் நிலைப்பாடுதான் என்னுடையதும் கூட. 26/11 சம்பவத்துக்குப் பிறகு மட்டும் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு ஐந்து முறை சென்று கிரிக்கெட் ஆடியிருக்கிறது.

ஒரு இருதரப்புத் தொடரில் கூட ஆடியிருக்கிறோம். இது ஐ.சி.சி தங்களின் அதிகாரத்தை உணர்ந்து சமநிலையோடு செயல்பட வேண்டிய நேரம். என அப்ரிடி ட்வீட் செய்திருக்கிறார்.
ஐ.சி.சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று கூடி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்துவதா வேண்டாமா என்பதைப் பற்றி முடிவெடுக்கவிருக்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


