IPL Mega Auction: இனி இவர்தான் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்!!
IPL Mega Auction: இனி இவர்தான் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்!!
18வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்றும், நாளையும் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. இரண்டு நாட்களிலும் மதியம் 3.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஏலம் நடக்கவுள்ளது. மொத்தமாக 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரிஷப் பந்தை சுமார் 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும், இதுவரை ஐ பி எல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட நபர் என்கிற சாதனையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஷ்ரேயாஸ் ஐயர் என்பவரை 26.75 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்துள்ளது. மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணி அர்ஷ்தீப் சிங்கை 18 கோடிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணி ஜோஸ் பட்லரை 15.75 கோடிக்கும், ஸ்டார்க்கை 11.75 கோடிக்கு டெல்லி அணியும் எடுத்துள்ளது.
The post IPL Mega Auction: இனி இவர்தான் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


