இந்தியா - மலேசியா ஆட்டம் டிராவில் முடிந்தது

ஹைதராபாத்: இந்தியா- மலேசியா அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட நட்பு ரீயிலான சர்வதேச கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் மலேசியோ முதல் கோலை அடித்தது. தொலை தூரத்தில் அடிக்கப்பட்ட பந்தை இந்திய அணியின் கோல் கீப்பர் குர்பிரீத் தனது இடத்தில் இருந்து முன்னேறி வந்து பாக்ஸ் பகுதியையும் தாண்டியபடி பந்தை பிடிக்க முயன்றார். ஆனால் பந்தை அவர் தவறவிட, பக்கவாட்டில் நின்ற மலேசிய வீரர் பவுலோ ஜோஷ் கோல் வலைக்குள் பந்தை திணித்தார். இதனால் மலேசியா 1-0 என முன்னிலை பெற்றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.