பிசிசிஐ எதிர்ப்பு எதிரொலி: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை சுற்றுப்பயணத்தை நிறுத்தி வைத்தது ஐசிசி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கு பிசிசிஐ கடும் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தை ஐசிசி நிறுத்தி வைத்தது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 2025-ம் ஆண்டு பிரப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணியை அனுப்ப முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்களை துபாயில் நடத்த வேண்டும் என ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்தது. ஆனால் தொடரை நடத்தும் உரிமையை பெற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.