தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: கால் இறுதியில் பஞ்சாப் அணி
சென்னை: 14-வது ஆடவருக்கான தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பஞ்சாப், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ அணியை எதிர்த்து விளையாடியது. இதில் பங்ஞ்சாப் அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணிக்கு 2-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் ‘ஏ’ பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பஞ்சாப் அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


