சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2024: விதித் குஜ்ராத்திக்கு 2-வது தோல்வி, அர்ஜுன் எரிகைசி டிரா
சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 2-வது நாளான நேற்று 2-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் மாஸ்டர்ஸ் பிரிவு 2-வது சுற்றில் ஈரான் கிராண்ட் மாஸ்டரான அமீன் தபதாபேயி, செர்பிய கிராண்ட் மாஸ்டரான அலெக்ஸி சரானா மோதினார்கள். இதில் அமீன் தபதாபேயி 45-வது நகர்த்தலின் போது வெற்றி கண்டார்.
இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான லெவோன் அரோனியனை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் அர்ஜுன் எரிகைசி விளையாடினார். இந்த ஆட்டம் 36-வதுநகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


