Rohit Sharma : ``ரோஹித்துக்கான கடைசி வாய்ப்பு ஆஸ்திரேலியா சீரிஸ்தான்! - ஸ்ரீகாந்த் கணிப்பு!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்தியா தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது.
Rohit

முதலாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்திலும், மூன்றாவது டெஸ்டில் 25 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று, 3-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவை வாஷ்அவுட் செய்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் இந்தியா தோல்வி அடைந்திருப்பது கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட முயற்சிப்பார். ஒருவேளை அதிலும் சிறப்பாக செயல்படவில்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்று விடுவார் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய அவர், " ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாக செயல்படாவிட்டால் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று நான் நினைக்கிறேன். அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே அவர் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடலாம்.

Rohit

அவர் நீண்ட காலம் இளமையாக இருக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணியின் இந்த தோல்விக்கு தன்னை பொறுப்பாளியாக அறிவித்துக் கொண்டார் ரோஹித் சர்மா. இந்த விஷயத்தில் தைரியமாக செயல்பட்ட அவரை நான் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.