சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் தொடர்கிறது: நியூஸிலாந்து அணி 171 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்
மும்பை: நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரது அரை சதம் காரணமாக 263 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82, வில் யங் 71 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா5, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் கைப்பற்றினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


