ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் மீண்டும் தோனி - தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!
மும்பை: ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான மெகா ஏலம் டிசம்பரில் நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் விவரம்: ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), மதீஷா பதிரானா (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ.4 கோடி).
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


