Dhoni: ஜார்க்கண்ட் தேர்தலில் தோனி... தேர்தல் ஆணைம் கொடுத்த சர்ப்ரைஸ்!
இந்திய கிரிக்கெட்டில் வரலாற்றில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியவர் மகேந்திர சிங் தோனி. ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநிலத்திலிருந்து வந்து கேப்டனாக இந்திய அணிக்கு மூன்று ஐ.சி.சி கோப்பைகளை வென்று கொடுத்த தோனிக்கு நாடு முழுவதிலும் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இவ்வாறிருக்க, அவரின் சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் வரும் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், ஜார்கண்ட் தேர்தலுக்கான பிராண்ட் அம்பாசிடராக தோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், தேர்தல் விழிப்புணர்வு பிரசாரங்களில் தனது புகைப்படங்களைப் பயன்படுத்தவும் தோனி அனுமதியளித்திருக்கிறார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜார்க்கண்ட் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கே. ரவி குமார், ``மகேந்திர சிங் தோனி தனது புகைப்படத்தைப் பயன்படுத்தத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் அளித்திருக்கிறார். மற்ற விவரங்களுக்கு அவரைத் தொடர்பு கொண்டுள்ளோம். வாக்காளர்களை ஊக்குவிக்கும் பணியில் மகேந்திர சிங் தோனி ஈடுபடுவார்.

SWEEP (முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு) திட்டத்தின்கீழ், வாக்காளர்களிடையே தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தோனி பணியாற்றுவார். குறிப்பாக, அதிகளவில் வாக்களிக்க வாக்காளர்களிடையே அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க தோனியின் வேண்டுகோள் மற்றும் பிரபலம் பயன்படும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது" என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


