மிட்செல் சாண்ட்னரின் சுழலில் சிக்கிய இந்திய அணி; 301 ரன்களுடன் நியூஸிலாந்து முன்னிலை | புனே டெஸ்ட் ஹைலைட்ஸ்

புனே: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 45.3 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி 79.1 ஓவரில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டேவன் கான்வே 76, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6, ஷுப்மன் கில் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.