ஹாக்கியில் இந்தியா தோல்வி
புதுடெல்லி: இந்தியா - ஜெர்மனி ஆடவர் ஹாக்கி அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஜெர்மனி அணி தரப்பில் 4-வது நிமிடத்தில் ஹென்ரிக் மெர்ட்ஜென்ஸும், 30-வது நிமிடத்தில் லூகாஸ் விண்ட்ஃபெடரும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


