Ajith: ``ரேஸிங்தான் என்னை நிறைவாக உணரச் செய்கிறது! -அஜித்தின் நெகிழ்ச்சியும் வெளியான அப்டேட்டும்!
நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்ளப் போகிறார் எனும் தகவல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அஜித்தின் மேலாளார் சுரேஷ் சந்திராவும் அதை உறுதி செய்தார். இந்நிலையில் அஜித் கலந்துகொள்ளப் போகும் ரேஸை பற்றி மேலும் சில அப்டேட்கள் வெளியாகியிருக்கிறது.
திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி அஜித்துக்கு மோட்டோ ஸ்போர்ட்ஸின் மீதும் துப்பாக்கிச் சுடுதலின் மீதும் தீவிர ஆர்வம் உண்டு. திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அஜித் பைக், கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார். 18 வயதிலேயே Indian National Motorcycle Racing Championship என்ற தொடரில் பங்கேற்றிருக்கிறார். 2000 களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்ட பிறகும் கூட அவருக்கு ரேஸின் மீதான ஆர்வம் குறையவில்லை. 2002 இல் National Formula India Single Sweater Championship, 2003 இல் Formula BMW Asia Championship, 2004 இல் British Formula 3 Championship, 2010 இல் European Formula 2 Championship என முக்கியமான தொடர்கள் பலவற்றிலும் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில்தான் இப்போது அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் Michelin Dubai 24H 2025 என்ற தொடரிலும் European 24 H series championship என்ற தொடரிலும் அஜித் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்.
Ajith Kumar Racing என்ற அணியின் சார்பில்தான் இந்த பந்தயங்களில் அவர் கலந்துகொள்ளப்போகிறார். அஜித்தின் அணியில் பேபியன் என்கிற GT4 Champion பட்டத்தை வென்றவரும், மேத்யூ டெட்ரி என்கிற GT3 பட்டத்தை வென்றவரும், கேம் மெக்லாட் என்கிற F4 British சாம்பியன் பட்டத்தை வென்றவரும் இடம்பிடித்திருக்கின்றனர். நோயல் தாம்சன் என்கிற மோட்டோ ஸ்போர்ட்ஸில் பெரும் அனுபவமிக்க நபர் அஜித் அணியின் மேனேஜராக செயல்படவிருக்கிறார்.
மீண்டும் ரேஸூக்கு திரும்புவதைப் பற்றி அஜித் பேசுகையில், ரேஸிங்கில் ஈடுபடும்போது மட்டும்தான் நான் முழுமையானவனாக உணர்கிறேன். எனக் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


