குறைந்த பந்துகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுகள்: வக்கார் சாதனையை முறியடித்த ரபாடா!
வங்கதேசத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று மிர்பூரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி சரசரவென விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களுக்குச் சுருண்டது . கேகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் வியான் முல்டர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷத்மன் இஸ்லாம் (0), மோமினுல் ஹக் (4) கேப்டன் நஜ்முல் இஸ்லாம் ஷாண்ட்டோ (7) ஆகியோர் முல்டரிடம் காலியாக முஷ்பிகுர் ரஹீம் ரபாடாவின் பெரிய இன்ஸ்விங்கருக்கு ஸ்டம்புகள் பறக்க அதுவே ரபாடாவின் 300-வது விக்கெட்டாக அமைந்தது. பிறகு லிட்டன் தாஸ் 1 ரன்னில் இருக்கும் போது ரபாடா வீசிய அருமையான எழுச்சிப் பந்தில் எட்ஜ் ஆக கல்லியில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அற்புதமான டைவ் அடித்து கேட்சைப் பிடித்தார், இது ரபாடாவின் 301-வது விக்கெட். கேகிஸோ ரபாடா 65-வது டெஸ்ட் போட்டியில் 117-வது இன்னிங்சில் 300 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


