“வருகிற சீசனில் தோனி விளையாடுவார்!” - சிஎஸ்கே சிஇஓ விஸ்வநாதன் நம்பிக்கை
திருவாரூர்: “வரும் சீசனில் சிஎஸ்கேவில் தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என திருவாரூரில் சிஎஸ்கே சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட கிரிக்கெட், அசோசியேஷன் சார்பில் 27-வது பரிசளிப்பு விழா, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில், திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ் விஸ்வநாதன் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணி மற்றும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில், செய்தியாளர்களை சந்தித்த அவர், “சிஎஸ்கே அணியில் தோனி விளையாட வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அதுகுறித்து இன்னும் அவர் எங்களிடம் கூறவில்லை. அக்டோபர் 31-ம் தேதிக்கு முன்னதாக கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


