2-வது டெஸ்ட்: யு-19 இந்திய அணி 316 ரன்கள் குவிப்பு; சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் நித்ய பாண்டியா

சென்னை: யு-19 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யு-19 இந்திய அணிமுதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்தது. நித்ய பாண்டியா 94 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த யு-19 இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. வைபவ் சூர்யான்ஷி 3 ரன்னில் ராம் குமார்பந்தில் போல்டானார். மற்றொரு தொடக்க வீரரான விஹான் மல்கோத்ரா 75 பந்துகளில் 10 ரன்கள் சேர்த்த நிலையில் ஹோக்ஸ்ட்ரா பந்தில் வெளியேறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.