Siragadikka Aasai: சத்யாவுக்காகச் சபதம் எடுக்கும் முத்து; ரோகிணியை வெறுக்கும் அம்மா

நேற்றைய சிறகடிக்க ஆசை எபிசோடில் கொலுவின் கடைசி நாள் முடிவில் முத்து மீனாவுக்குப் பெரிய அவமானம் நேர்ந்ததைப் பார்த்து ரோகிணியும் விஜயாவும் சிரிக்கின்றனர். அண்ணாமலை மீனாவுக்கு ஆறுதல் சொல்கிறார். ``நீங்க அந்த சின்ன பையனுக்கு நல்லது பண்ணணும்னு நெனச்சீங்க, அது அவங்க பாட்டிக்குப் பிடிக்கல. நீங்க வருத்தப்படாதீங்க” என்கிறார். 

மற்றொரு புறம் முத்து வீட்டிலிருந்து கோபமாகக் கிளம்பிய ரோகிணியின் அம்மா, சாலையோரத்தில் நின்று கதறி அழுகிறார். முத்து-மீனாவை அவமானப்படுத்தியதை எண்ணி வருந்துகிறார். ரோகிணியின் தோழி வித்யா வீட்டிற்குச் சென்றும் கூட அவர் அழுதபடி இருக்கிறார். 

Siragadikka Aasai

ரோகிணி வித்யா வீட்டிற்கு வருகிறார். க்ருஷ் தூங்கி கொண்டிருப்பதைப் பார்த்து, "இன்னைக்குதான் நானும் நிம்மதியா தூங்க போறேன். முத்து இனிமே க்ருஷ தத்தெடுக்க முயற்சி பண்ண மாட்டாரு.” என்று சொல்ல, அவரின் அம்மாவுக்குக் கோபம் வருகிறது.

‘’நீ சொன்னதாலதான் முத்து-மீனா மனச கஷ்டப்படுத்திட்டேன்” என்று சொல்லிப் புலம்புகிறார்.

முத்துவை அவமானப்படுத்தச் சொல்லி தன் அம்மாவை மிரட்டியது ரோகிணிதான். இதில் அவரின் அம்மாவுக்குத் துளியும் விருப்பம் இல்லை என்பது இந்த காட்சி மூலம் தெரிகிறது. மேலும் சிறிய வயதில் ரோகிணிக்குப் பணக்காரர் ஒருவரைத் திருமணம் செய்து வைத்ததும் கூட, அவருக்கு நல்லது நடக்கட்டும் என்பதற்காக மட்டும்தான் என்று ரோகிணியின் அம்மா புலம்புகிறார். 

சிறகடிக்க ஆசை

ரோகிணிக்கு 18 வயதில் ஒரு பணக்காரரைத் திருமணம் செய்து வைக்க, அந்த மாப்பிள்ளை குடித்து சொத்துக்களை அழித்து விட்டு இறந்துவிடுவார். எனவே ரோகிணி தன் வாழ்க்கை இப்படி ஆனதற்கு `நீதான் காரணம்’ என்று குத்திக்காட்டிக் கொண்டே இருக்கிறார்.

ரோகிணியின் வாழ்க்கை இப்படி ஆனதற்கு நாம் காரணம் ஆகிவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சியில்தான் அவரின் அம்மா இந்த தவறுகளுக்குத் துணை போகிறார். மற்றபடி முத்து-மீனாவை அவமானப்படுத்த வேண்டும் என்பது அவரின் எண்ணம் கிடையாது என்று வித்யாவிடம் சொல்கிறார். முத்து-மீனா க்ருஷின் உயிரைக் காப்பாற்றியது, தன் உயிரைக் காப்பாற்றியது என அனைத்தையும் சொல்லி அழுகிறார். ``இப்படி நல்லவங்க மனச கஷ்டப்படுத்திட, நீ நல்லா அனுபவிப்ப’’ என்று தன் சொந்த மகள் என்று கூட பாராமல் சாபம் விடுகிறார்.

மீனா நடந்ததை எண்ணி அழுது கொண்டிருக்க, முத்து ஆறுதல் சொல்கிறார். `அவங்க அப்படி பேசிட்டாங்கன்னு க்ருஷ்ஷ அப்படியே விட்ற முடியாது, கொஞ்ச நாள் போகட்டும், திரும்பவும் போய் கேட்போம்’ என்று முத்து சொல்வது க்ருஷ் மீதான அவரின் அன்பைப் பிரதிபலிக்கிறது. இதை ஒட்டுக் கேட்ட ரோகிணியும் விஜயாவும், மீனாவை அவமானப்படுத்துகின்றனர். அப்போது ரோகிணியின் அம்மாவை விஜயா கேவலமாகப் பேச, ரோகிணிக்குக் கோவம் வருகிறது. 

சிறகடிக்க ஆசை
Siragadikka Aasai

மீனாவுக்குப் புதிய பிரச்னை வருகிறது. சத்யா கல்லூரிக்குச் சரியாகப் போகாததால் அவரால் இறுதித் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுகிறது. இதை மீனாவிடம் சொல்லி அழுகிறார். சிட்டியுடன் சேர்ந்து அராஜகம் செய்த சத்யா, தற்போது சிறு பிள்ளை போன்று அழுவது சிரிக்க வைக்கிறது. 

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’’ என்ற வார்த்தைக்கு ஏற்ப சத்யா, தான் செய்த செயல்களின் பலனை அனுபவிக்கிறார்.

சிறகடிக்க ஆசை
Siragadikka Aasai

சத்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் சின்னத்திரை நடிகர் திவாகர் அற்புதமாக நடிப்பில் வித்தியாசத்தைக் காட்டுகிறார். கூடா நட்புடன் முத்துவை அடிக்க பாயும் போது அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. தற்போது தேர்வு எழுத முடியாது என அழும் போது பரிதாபம் ஏற்படுகிறது. முத்துவும் அவரை, அழாதடா நான் பார்த்துக்குறேன் என்று அவரின் மிரட்டல் பாணியில் அன்பு செய்தது ரசிக்க வைக்கிறது.

சத்யாவுக்காக முத்து கல்லூரிக்குச் சென்று பேசப்போகிறார். ``நீ எக்ஸாம் எழுதுற. நான் உன்ன எழுத வைக்கிறேன்” என்று சபதம் செய்திருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.