‘அனைவரையும் முயற்சித்து விட்டோம்; அவர் ஒருவர் மட்டுமே மீதி’ - பாகிஸ்தானின் அடுத்த கேப்டன் யார்?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அஸம் விலகியதையடுத்து அடுத்த கேப்டனாக தேர்வு செய்வதற்கு அனைவரையும் முயற்சி செய்து விட்ட நிலையில் முகமது ரிஸ்வான் மட்டுமே மீதமுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் தொடக்க வீரர் முடாசர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஆனால், முகமது ரிஸ்வான் மீது வீரர்களுக்கோ, அணி நிர்வாகத்திற்கோ அவ்வளவு திருப்தியில்லை என்பதையும் முடாசர் நாசர் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. பாபர் அஸம் குறைந்த ஓவர் கிரிக்கெட்டுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை உதறிய பிறகு அங்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அஸமுக்கு அடுத்தபடியாக கேப்டன் பொறுப்பை ஏற்ற ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி, 5 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததும் பேசுபொருளாக அங்கு திகழ்ந்து வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

