Rashid Khan : மூன்று சகோதரர்களுடன் ஒரே மேடையில் ரஷீத் கானுக்கு திருமணம்! - வைரலாகும் புகைப்படங்கள்

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் மற்றும் அவரது மூன்று சகோதரர்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீத் கான் முன்னணி ஆல்ரவுண்டர்களுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் ரஷீத் கானுக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது திருமணம் காபூலில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. ரஷித் கானுக்கு மட்டுமல்லாது, அவரது சகோதரர்களான ஆமிர் கலில், சகியுல்லா, ரசா கான் ஆகியோருக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

ரஷீத் கானுக்கும் அவரது 3 சகோதரர்களுக்கு ஒரே மேடையில் நடைபெற்ற திருமணம்

நால்வரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சக வீரர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் திருமண விழாவில் கலந்து கொண்டு, ரஷீத் கானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருகின்றனர்.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது நபி, "ஒரேயொரு கிங் கான் ஆன ரஷித் கானுக்கு வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துகள்" என தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.

ரஷீத் கானுக்கும் அவரது 3 சகோதரர்களுக்கு ஒரே மேடையில் நடைபெற்ற திருமணம்

அந்த தனியார் ஹோட்டல் இருந்த இடமே விழாக்கோலம் போல காணப்பட்டிருக்கிறது. அந்த ஹோட்டலைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக பலர் துப்பாக்கி ஏந்தியபடி சென்ற வீடியோக்கள், இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.