நிகோலஸ் பூரனுக்கு 2024 ஓர் அற்புத ஆண்டு - அதிரடியில் கிறிஸ் கெய்லை முந்தி புதிய சிகரம்!
கரீபியன் பிரீமியர் லீக்கில் செம்ம பார்மில் இருக்கும் நிகோலஸ் பூரன் 3 நாட்களில் தொடர்ச்சியாக 2 சதங்கள் விளாசினார். டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் வீரரான நிகோலஸ் பூரன் இந்த ஆண்டு கலக்கு கலக்கென்று கலக்கியுள்ளார்.
இந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் 11 இன்னிங்ஸ்களில் 506 ரன்களை விளாசினார். சராசரி 56 ரன்கள் என்பதோடு, ஸ்ட்ரைக் ரேட் 169.69. எட்டு நாடுகளின் பலதரப்பட்ட பந்து வீச்சுகளைப் புரட்டி எடுத்துள்ளார். சர்வதேச டி20யாக இருந்தாலும், பிரான்சைஸ் டி20யாக இருந்தாலும், நிகோலஸ் பூரன் ஒரு அசைக்க முடியாத அதிரடி வீரராகத் தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

