இந்தியா - ஜெர்மனி இடையே இருதரப்பு ஹாக்கி தொடர்
புதுடெல்லி: இந்திய ஆடவர் ஹாக்கி அணி 2 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு தொடரில் ஜெர்மனியுடன் மோத உள்ளது. இந்த ஆட்டங்கள் வரும் அக்டோபர் 23 மற்றும் 24-ம் தேதிகளில் டெல்லியில் உள்ள மேயர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெறுகின்றன. இத்தகவலை ஹாக்கி இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
கடைசியாக இந்தியா - ஜெர்மனி ஹாக்கி அணிகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. இந்த ஆட்டத்தில் ஜெர்மனி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்தத் தொடரில் இந்தியா, ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

