பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி உயரிய ஊக்கத்தொகை: முதல்வர் வழங்கினார்

சென்னை: பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம்வென்ற பாட்மிண்டன் வீராங்கனை துளசிமதிக்கு ரூ.2 கோடி, வெண்கலப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனைகள் நித்யஸ்ரீ மற்றும் மனிஷா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி, ஆடவர்உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்ற தடகள வீரர்மாரியப்பனுக்கு ரூ.1 கோடி என உயரிய ஊக்கத் தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில்வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறையின் செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.