எம்சிசி முருகப்பா கோப்பை ஹாக்கி: இறுதிச் சுற்றில் ரயில்வேஸ், ஐஓசி
சென்னை: எம்சிசி முருகப்பா கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ரயில்வேஸ் (ஆர்எஸ்பிபி), ஐஓசி அணிகள் முன்னேறியுள்ளன.
95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதிப் போட்டியில் ரயில்வேஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் எச்ஓடி அணியை வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ரயில்வேஸ் அணி தரப்பில் ஜோகிந்தர் சிங் 3 கோல்களும் (1, 38, 43-வது நிமிடங்கள்), யுவராஜ் வால்மீகி ஒரு கோலும் (16-வது நிமிடம்) அடித்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

