லப்பர் பந்து படத்தை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்!! ஆச்சர்யத்தில் மூழ்கிய படக்குழு!!
லப்பர் பந்து படத்தை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்!! ஆச்சர்யத்தில் மூழ்கிய படக்குழு!!
அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் லப்பர் பந்து. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கி இருந்தார். இந்தப் படம் யாரும் எதிர்பாராத விதமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்தி வருவதை தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தப் படத்தை பாராட்டியுள்ளது ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.
அதாவது, பிரபல கிரிக்கெட் வீரரான அஷ்வின் தற்போது லப்பர் பந்து திரைப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து கூறியுள்ளார். அதாவது, நீண்ட நாட்களுக்கு பிறகு நான் ஒரு படத்தை ரசித்தேன். கிரிக்கெட் வைத்து ஏதாவது படம் எடுத்தாலே அதை மக்கள் பெரிதும் கண்டுகொள்வதில்லை. ஆனால் இந்தப் படம் அப்படி இல்லாமல் மிகவும் ஸ்பெஷல் ஆக இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவும் சேர்ந்து சிறந்த படைப்பை கொடுத்துள்ளார்கள் என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் லப்பர் பந்து திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
The post லப்பர் பந்து படத்தை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்!! ஆச்சர்யத்தில் மூழ்கிய படக்குழு!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

