ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா தனது முதல் எண்ணிக்கையில் 376 ரன்கள் எடுத்தது. 

 

இதனை அடுத்து வங்கதேச அணி 149 ரன்களில் சுருண்ட நிலையில், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெயஸ்வால் இருவரும் ஏமாற்றம் அளித்தாலும், சுப்மன் கில் அபாரமாக விளையாடி 88 ரன்கள் எடுத்து, அவுட் ஆகாமல் உள்ளார். இன்னும் சில நிமிடங்களில் அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

முன்னதாக, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி 109 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சற்று முன் இந்திய அணி 56 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்துள்ளது, மேலும் 461 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.