துலீப் டிராபி: இஷான் கிஷன் சதம் விளாசல்
அனந்தபூர்: துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘சி’ - இந்தியா ‘பி’ அணிகள் இடையிலான ஆட்டம் அனந்தபூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ‘பி’ பீல்டிங்கை தேர்வு செய்ததது.
முதலில் பேட் செய்த இந்தியா ‘சி’ அணி முதல் நாள் ஆட்டத்தில் 79 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 126 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த பாபா இந்திரஜித் 136 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 78 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

