ஐஎஸ்எல் 11-வது சீசன்: தொடக்க ஆட்டத்தில் இன்று மோகன் பகான் - மும்பை மோதல்
கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 11-வது சீசன் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை சிட்டி எஃப்சி, மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தர் யுவ பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெறுகிறது. மோகன் பகான் அணி கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்திருந்தது.
ஐஎஸ்எல் தொடரில் மோகன் பகான் அணி, மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மோகன் பகான் அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த மோசமான சாதனையை மாற்றுவதற்கான முயற்சியில் மோகன் பகான் அணி செயல்படக்கூடும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

