45-வது செஸ் ஒலிம்பியாட் | இந்திய ஆடவர் அணி மொராக்கோவை வீழ்த்தியது: மகளிர் அணியும் வெற்றியுடன் தொடங்கியது

புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் இந்திய ஆடவர் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, மொராக்கோவின் திசிர் மொஹமதுவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 30-வது காய் நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

இதேபோன்று அர்ஜூன் எரிகைசி 40-வது காய் நகர்த்தலின் போது ஜாக் எல்பிலியாவையும், விதித் குஜராத்தி 27-வது காய் நகர்த்தலின் போது ஒவாகிர் மெஹ்தியையும், ஹரிகிருஷ்ணா 33-வது காய் நகர்த்தலின் போது அனஸ் மோயாத்தையும் தோற்கடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது. உலக சாம்பியன்ஷிப்பில் விளையாட உள்ள டி.குகேஷுக்கு முதல் சுற்றில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.