ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன் மோதியது.
இதில் இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ராஜ் குமார் ஹாட்ரிக் கோல் (3, 25 மற்றும் 33-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். அரஜீத் சிங் ஹூன்டால் இரு கோல்களையும் (6 மற்றும் 39-வது நிமிடங்கள்), ஜுக்ராஜ் சிங் (7-வது நிமிடம்), ஹர்மன்பிரீத் சிங் (22-வது நிமிடம்), உத்தம் சிங் (40-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

