WorldCup 2023: ரூ.11,637 கோடி பணப்புழக்கம், 1.25 மில்லயன் பார்வையாளர்கள் - ஐசிசி சொன்ன தகவல்

2023 ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் அக்டோபர் 8-ம் தேதி தொடங்கி நவம்பர் 11-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற்றது.

 நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் இத்தொடரில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்திருந்தன. சென்னை, டெல்லி, அகமதாபாத், புனே, தரம்சாலா, லக்னோ, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய இடங்களில் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றிருந்தது. இப்போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் சாரை சாரையாக அணிவகுத்து வந்து ஒவ்வொரு போட்டியையும் கொண்டாடியிருந்தனர்.

2023 உலகக் கோப்பை

தொடரின் கடைசியில் இந்திய ரசிகர்களின் கொண்டாட்டத்தைத் தகர்த்து இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாகயிருந்து. இருப்பினும், பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு 2023 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் ஏமாற்றத்தை அளிக்கவில்லை.

2023 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் போட்டிகள் நடைபெற்ற நகரமே அந்த சமயத்தில் கோலாகத்தில் மூழ்கியிருந்தது. போட்டி நடைபெறும் மைதானத்தைச் சுற்றிலும் இருந்தக் கடைவீதிகளில் சிறு தொழில் செய்பவர்கள், சாலையோரக் கடைகள் வைத்திருப்பவர்கள், மைதானத்தில் உள்ளே ஸ்டால்கள் போட்ட கார்ப்பரேட் கடைகள் எல்லோருக்கும் வியாபாரம் கலைகட்டியது. இதுதவிர போட்டியைப் பார்க்க வந்த ரசிகர்கள் விமானம், டாக்ஸி, தங்கும் விடுதிகள், ஹோட்டல்களைப் பயன்படுத்தியது என பெருமளவு பணப்புழக்கம் ஏற்பட்டது.

2023 உலகக் கோப்பை

இதுகுறித்து தற்போது அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்டிருக்கும் ஐசிசி, 2023 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரால் இந்தியாவில் ரூ.11,637 கோடி (USD1.39 billion) வரை பணப்புழக்கம் நடந்துள்ளதாகக் கூறியிருக்கிறது. இந்தியாவின் சுற்றுலாத் துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும்,1.25 மில்லயன் நபர்கள் போட்டியைக் காண மைதானம் வந்திருப்பதாகக் கூறியிருக்கிறது ஐசிசி.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.