பாராலிம்பிக்ஸ் தொடர் - இந்தியா வரலாற்று சாதனை.! 29 பதக்கங்களுடன் நிறைவு.!!

7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் உட்பட 29 பதக்கங்களை வென்று பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடரை இந்தியா நிறைவு செய்துள்ளது.

 

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி ஆகஸ்ட் 28ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

 

கடைசி நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடந்து வரும் நிலையில், இந்திய வீரர்கள், வீராங்கனைகளின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. மொத்தமாக பாராலிம்பிக்ஸ் தொடரில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என்று 29 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது. இதன் மூலமாக பதக்கப் பட்டியலில் இந்தியா 18வது இடத்தை பிடித்துள்ளது.


ALSO READ:  பிரச்சனைகளை சந்திப்பது வழக்கம்தான்.! நடிகர் விஜய்யின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்.! திருமாவளவன்..



கடந்த பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா 19 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த நிலையில், இம்முறை கூடுதலாக 10 பதக்கங்களை வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.