பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பனுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து: உத்வேகம் தரும் வெற்றி என பெருமிதம்
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் விளையாட்டில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: மாரியப்பன் தங்கவேலுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பது என்பது அவரின் திறமை, அசைக்க முடியாத உறுதி மற்றும் நிகரற்ற விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனை நம் தேசத்துக்கு மகத்தான பெருமையைத் தருவதுடன் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு சக்திவாய்ந்த உத்வேகமாக உள்ளது. அவர் தொடர்ந்து வெற்றியடையவும் எதிர்காலத்தில் மென்மேலும் சிறந்த சாதனைகளைப் படைக்கவும் வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.