ஜூன் 11-ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

துபாய்: 3-வது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 2025-ம் ஆண்டு ஜூன் 11 முதல் 15-ம்தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16-ம் தேதி ரிசர்வ் நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.2021-ம் ஆண்டு சவுத்தாம்படனிலும், 2023-ம்ஆண்டு ஓவல் மைதானத்திலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடத்தப்பட்டிருந்தது. இந்த இரண்டு இறுதிப் போட்டியிலும் இந்திய அணி விளையாடியிருந்தது. இதில் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து இந்திய அணி பட்டம் வெல்லும் வாய்ப்பைஇழந்திருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.