வினைகளை தீர்க்கும் விநாயகர் மந்திரம்
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த செப்டம்பர் மாதம் என்பது விநாயகர் பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் இந்த செப்டம்பர் மாதத்தில் தான் ஆவணி மாதம் வருகிறது. ஆவணி மாதத்தில் தான் விநாயகர் பெருமான் அவதரித்தார் என்பதால் இந்த மாதம் விநாயகர் பெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த மாதத்தில் விநாயகரின் எந்த மந்திரத்தை கூறினால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வினைகளை தீர்க்கும் விநாயகர் மந்திரம்
விநாயகப் பெருமானின் அவதாரத்தை பற்றி பலருக்கும் தெரியும். குழந்தைகள் விரும்பும் கடவுளாக திகழ்கிறார். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தை செய்ய தொடங்குவதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு தொடங்கினால் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்று பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் இன்றளவும் எந்த ஒரு சுபகாரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை பிடித்து வைத்து தான் செய்ய ஆரம்பிக்கிறோம்.
அப்படிப்பட்ட விநாயகப் பெருமான் அவதரித்த இந்த மாதத்தில் விநாயகப் பெருமானுக்குரிய மந்திரத்தை நாம் இந்த மாதம் முழுவதும் 3008 முறை கூறினால் நம்முடைய கர்ம வினைகள் நீங்கி நமக்கு நல்ல முன்னேற்றமான வாழ்க்கை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மந்திரத்தை தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கூறினால் போதும். இந்த மாதத்திற்குள் 3008 கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மந்திரத்தை நாம் கூறும் பொழுது ராகு காலம், எமகண்டம் என்பது இருக்கக் கூடாது. ஒரு இடத்தில் அமர்ந்து கூறுவது தான் சிறப்பு. வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது இந்த மந்திரத்தை கூறினால் அதனால் எந்த பலனும் கிடைக்காது.
வீட்டில், அமர்ந்து வேலை செய்யும் இடத்திலோ, ஏதாவது ஒரு பொது இடத்தில் கூட அமர்ந்த வண்ணம் இந்த மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்தால் போதும். குறிப்பாக தினமும் காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டு பூஜை அறையிலோ அல்லது அமைதியான ஒரு இடத்தில் கிழக்கு முகமாக பார்த்து அமர்ந்து விநாயகரின் இந்த மந்திரத்தை கூறும் பொழுது நமக்கு வெற்றிகள் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. தரையில் அமர்ந்து கூறுவதற்கு பதிலாக ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர்ந்து கூறலாம்.
கீழே அமர்ந்து கூற இயலாது என்பவர்கள் நாற்காலியில் அமர்ந்து கூறலாம். ஆனால் கால்களை தரையில் வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாத இறுதிக்குள் 3008 முறை இந்த மந்திரத்தை கூறி விட்டால் நாம் செய்த கர்ம வினைகள் அனைத்தும் நீங்க விடும் என்றும் கர்ம வினைகள் நீங்குவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் விலகி நல்ல மாற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
மந்திரம்
ஓம் விக்னேஸ்வராய நமஹ
இதையும் படிக்கலாமே: நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருக மந்திரம்
இந்த எளிமையான விநாயகர் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
The post வினைகளை தீர்க்கும் விநாயகர் மந்திரம் appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.