Mohammed Shami : `வாய்ப்புக்காக ஏங்கியே பழகிவிட்டேன், ஆனாலும்... - முகமது ஷமி ஓப்பன் டாக்

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி.

கடந்த ஆண்டு (2023) நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அதுமட்டுமன்றி அந்தத் தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விகெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஆனால் முகமது ஷமிக்கு இந்திய அணியில் பெரிதாக வாய்ப்புகள் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற அந்த உலகக்கோப்பை தொடரில்கூட முதல் நான்கு போட்டிகளில் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

முகமது ஷமி

அப்போது ஹர்திக் காயமடைந்து வெளியேறிதைத் தொடர்ந்து முகமது ஷமிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முகமது ஷமி, "2023 உலகக் கோப்பையில் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்புக்காக ஏங்கி பழகி விட்டேன் என்று நினைக்கிறேன்.

2015, 2019 தொடர்களிலும் நான் அதே துவக்கத்தைக் கொடுத்தேன். அது போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்திய பின் நன்றி கடவுளே இனிமேல் அவர்கள் என்னை நீக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். வாய்ப்புக்காக கடினமாக உழைக்கிறோம். எனவே வாய்ப்பு கிடைக்கும் போது அதில் அசத்துவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.

முகமது ஷமி

அப்படி நீங்கள் தயாராக இருந்தால்தான் உங்களை நீங்களே நிரூபிக்க முடியும். இல்லையேல் களத்தில் மற்ற வீரர்களுக்கு தண்ணீரை மட்டுமே எடுத்துச் சென்று கொடுக்க முடியும். அதனால் வாய்ப்பு கிடைக்கும்போது அதை நீங்கள் பிடித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.