பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 5-வது பதக்கம்: துப்பாக்கிச் சுடுதலில் ரூபினா வெண்கலம்!
பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கல பதக்கம் வென்றார். இது இந்தியாவின் 5-ஆவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராலிம்பிக்ஸில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (எஸ்ஹெச்1) இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபினா பங்கேற்றார். முதல் சீரிஸில் 50.0 புள்ளிகளைப் பெற்ற இரண்டாம் இடம் பிடித்தார். 2-வது சீரிஸில் 97.6 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்தார். தொடர்ந்து முந்துவதும், பின்தங்குவதுமாக இருந்த அவர், இறுதியில் 211.1 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். இதில் ஈரான் வீராங்கனை சரே ஜவன்மார்டி 236.8 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். துருக்கி வீராங்கனை ஐசென் ஓஸ்கல் 231.1 புள்ளிகளைப் பெற்று வெள்ளி வென்றார். இந்திய வீராங்கனை ரூபினா வெண்கலம் பதக்கம் வென்றுள்ள நிலையில் இந்தியாவுக்கு இதுவரை மொத்தம் 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

