பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்கம் வென்றார் இந்தியாவின் அவனி லெகரா
பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கப் பதக்கம் வென்றார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் (எஸ்ஹெச் 1) பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா இறுதிப் போட்டியில் 249.7 புள்ளிகள் குவித்து பாராலிம்பிக்ஸ் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் அவனி லெகரா 249.6 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதன்மூலம் பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளா 22 வயதான அவனி லெகரா.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

