Ronaldo: `கால்பந்தில் நான் வைத்திருக்கக்கூடிய சிறந்த இலக்கு அதுதான்..!’ - ரொனால்டோ ஓப்பன் டாக்
சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
39 வயதான இவர் கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் Golden Foot விருதை 5 முறை வென்றிருக்கிறார். கால்பந்தையும் தாண்டி பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். சமீபத்தில் இவர் தொடங்கிய யூட்யூப் சேனல் மிக விரைவில் அதிக சப்ஸ்க்ரைபரை பெற்று சாதனை படைத்தது.
இதனிடையே சவுதி ப்ரோ லீகில் அவர் நேற்று அடித்த கோலின் மூலம் 899 கோல்கள் அடித்திருக்கிறார். இன்னும் ஒரு கோல் அடித்தால் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். இதற்காக அவரது ரசிகர்கள் எப்போது அந்த 900 கோலை அடிப்பார் எனக் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து பேசிய ரொனால்டோ, " விரைவில் 900 கோல்கள் என்ற கணக்கை அடைவேன்.
ஆனால் 1,000 கோல்கள் அடித்தவன் என்ற இலக்கை எட்ட விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை கால்பந்தில் நான் வைத்திருக்கக்கூடிய சிறந்த இலக்கு அதுதான். அப்போது எனக்கு 40 வயதை தாண்டியிருக்கும். 11 வயதிலிருந்தே, நான்தான் உலகில் சிறந்தவன் என எனக்குள் சொல்லிக்கொள்வேன், நான் எப்போதும் உயர்வாக சிந்திப்பவன்.

நான் என்னுடைய 11 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்தேன். என் கனவுகளை துரத்தினேன். அப்போது நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு மிகுந்த வலியை கொடுத்தது. ஆனாலும் என்னுடைய கனவுகளை நோக்கி நான் நம்பிக்கையுடன் ஓடினேன். அதனால் தான் இன்றைக்கை என்னை பலகோடி ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்" என்று கண் கலங்கி பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


