ஹர்திக் நடாஷா உறவு முறிவிற்கு என்ன காரணம்?... குடும்ப நண்பர் பகிர்ந்த தகவல்!


இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், செர்பியா நாட்டைச் சேர்ந்த நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- நடாஷா திருமண வாழ்வில் சில மாதங்களுக்கு முன்னர் விரிசல் எழுந்தது. ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்தை அறிவித்தனர். இப்போது நடாஷா தனது மகனோடு செர்பியாவுக்கே திரும்பி சென்றுவிட்டார்.

இந்நிலையில் இவர்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வர ஹர்திக் பாண்ட்யாவின் சில குணாதிசயங்கள்தான் காரணம் என்று அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் “ஹர்திக் எப்போதுமே தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விட தன்னுடைய இமேஜ் பற்றி அதிகம் கவலைப்படுவார். மேலும் அவரின் பரபரப்பான கிரிக்கெட் வாழ்க்கையால் அவரால் அதிகமாக குடும்பத்தினரோடு நேரம் செலவிடமுடியவில்லை. இதனால் நாளுக்கு நாள் அவர்களுக்கான விரிசல் அதிகமாகி வந்தது. ஒரு கட்டத்தில் நடாஷா மனமுடைந்து விவாகரத்து முடிவை எடுத்தார்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.