புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணிகள் அறிவிப்பு

சென்னை: 12 அணிகள் கலந்து கொண்டுள்ள புச்சிபாபு கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் தமிழகத்தில் இருந்து டிஎன்சிஏ பிரசிடெண்ட் லெவன், டிஎன்சிஏ லெவன் ஆகிய இரு அணிகள் கலந்து கொள்கின்றன.

டிஎன்சிஏ பிரசிடெண்ட் லெவன் தனது முதல் ஆட்டத்தில் (ஆக.21 முதல் 24 வரை) இந்தியன் ரயில்வேஸ் அணியுடன் மோதுகிறது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் (ஆக.27 முதல் 30 வரை) குஜராத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த இரு ஆட்டங்களும் சேலத்தில் நடைபெறுகிறது. அதேவேளையில் டிஎன்சிஏ லெவன் தனது முதல் ஆட்டத்தில் (ஆக.21 முதல் 24 வரை) ஹரியானாவுடனும், 2-வது ஆட்டத்தில் (ஆக.27 முதல் 30 வரை) மும்பையுடனும் மோதுகிறது. இந்த ஆட்டங்கள் கோவையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான தமிழக அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.