மல்யுத்த கூட்டமைப்பு விவகாரம்; ஒலிம்பிக் சங்க தற்காலிகக் குழுவை மீண்டும் அமைக்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யூஏ) விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஏஓ) தற்காலிகக் குழுவை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் எழுப்பப்பட்டது. அவருக்கு எதிராக சாக்சி மாலிக் உள்ளிட்ட 6 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி இருந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தனர். இதையடுத்து, டெல்லி போலீஸார் பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.