மே.இ.தீவுகள் அணியில் ரஸ்ஸல், ஹோல்டருக்கு ஓய்வு
ஆண்டிகுவா: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் வரும் 24-ம்தேதியும், 2-வது ஆட்டம் 26-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 28-ம் தேதியும் நடைபெறுகிறது.
இந்த 3 ஆட்டங்களும் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் நடைபெறுகின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான மேற்கு இந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீனியர் ஆல்ரவுண்டர்களான ஜேசன் ஹோல்டர், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அலிக் அத்தானஸ், 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ ஃபோர்ட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
